மனித உடலில் உள் உறுப்புகள் ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுழற்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன .அந்த நேரத்தில் நமக்கு வரும் எந்த நோய்களாக இருந்தாலும் ,எந்த உறுப்பு தொடர்புடையது என்று தெரிந்துகொண்டு அதற்கு மருந்தில்லா மருத்துவத்தில் எளிதில் நாம் கடைபிடிக்கும் ஒரு சில பழக்க வழக்கங்கள் மூலம் நமது உடலில் உள்ள அனைத்துவகை நோய்களுக்கும் முற்றிலும் குணம்கிடைக்கும் .
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை :இந்த நேரத்தில் நுரையீரல் தன் வேலையைச் செய்து கொண்டிருப்பதால் .இந்த நேரத்தில் நாம் தூக்கத்திலிருந்து விழிப்பது மிகவும் நல்லது .யோகாசனம் மூச்சுப்பயிற்சி ,தியானம் செய்வது மிக மிக நல்லது 3.30 to 6.05 மணி வரை வெட்டவெளியில் கிடைக்கும் அமுதக் காற்று ஓசோன் வீசுகிறது.அதனால் நாம் புது சக்தியை பெறுகின்றோம்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தாங்கமுடியாமல் சிரமப்படுவதை நாம் உணரலாம்.ஏழை எளிய மக்கள் வெட்டவெளியில் படுத்துறங்குவதுன் காரணமாகத்தான் அவர்களை எந்த நோயும் பாதிப்பதில்லை.
காலை 5 மணி முதல் 7 மணி வரை:பெருங்குடல் வேலை செய்யும் 5 to 7 மணிக்கு கண்டிப்பாக எழுந்திருக்கவேண்டும்.இந்த நேரத்தில் எழுந்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது .காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.உடலும் மனமும் லேசாக இருக்கும்
7 மணி முதல் 9 மணி வரை :வயிறு இரப்பை இயங்கி கொண்டிருப்பதால் கண்டிப்பாக காலை உணவை முடித்திருக்க வேண்டும்.எதையும் ஜீரணிக்கும் தன்மை வாய்ந்தது உடலுக்கு வலு சேர்க்கும் நேரம்
9 மணி முதல் 11 மணி வரை:இது தன் வேலையை செய்து கொண்டிருப்பதால் சிற்றுண்டியோ ,வெறும் தண்ணீர் கூட சாப்பிடக்கூடாது.மீறி சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும் உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதன் காரணமாக உணவு சாப்பிட்டதும் ஏற்படவேண்டிய சுறுசுறுப்பிற்கும் ,புத்துணர்ச்சிக்கும் பதிலாக அசதியும் தூக்கமும் நம்மை ஆட்கொள்ளும் நாளடைவில் பசிகுறையும் இந்த மண்ணீரல் செயல் இயக்க குறைவு தான் காரணம் .நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரம் இது .(படபடப்பு,மயக்கம்,தூக்கக்கலக்கம் ஏற்படும்)
கோபப்படக்கூடாது.நண்பகல் 11 மணி முதல் 1மணி வரை :இயங்கி கொண்டிருப்பதால் கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம் .நகரத்தில் உள்ள எல்லாத் தனியார் மற்றும் அரசு மருத்துவனைகள் விழிப்புடன் இருக்கும் நேரம் இது .காரணம் இந்நேரத்தில் தான் இதய நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் அதனால்,தூங்காமல் இருக்க வேண்டும் .அப்படித்தூங்கினால் அபானவாயு பிராணவாயுடன் கலந்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பாகின்றது.(அல்லது )முகவாதம் ,மூட்டுவாதம் உடல்வலிகள் நிச்சயம் தோன்றும் .
பகல் 1மணி முதல் 3மணி வரை :இயங்கி கொண்டிருப்பதால் மதிய உணவு முடிந்து கொஞ்ச நேரம் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம்படுத்து உறங்குவதை இந்நேரத்தில் தவிர்க்க வேண்டும் .
நீர்க்கழிவுகள் சீராக இயங்கும் நேரம் பகல் 3மணிமுதல் 5மணி வரை ::இயங்கி கொண்டிருப்பதால் பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம் இது முதுகுவலி இடுப்புவலி வரும் நேரம் இது .
மாலை 5மணிமுதல் 7மணி வரை:இயங்கி கொண்டிருப்பதால் வழக்கமான வேலைகளில் இருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும் .ரீனல் பெயிலியர் முதல் நீர்க்கடுப்பு வரை ஏற்படும் .மன அமைதியை கடைபிடிக்கவேண்டிய நேரம் தெய்வீக வழிபாடு செய்வது நல்லது .
இரவு 7மணிமுதல் 9மணி வரை:இயங்கி கொண்டிருப்பதால் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும் .மார்பு வலி ,படபடப்பு உடல் பாரம் தோன்றும் .
இரவு 9மணிமுதல் 11மணி வரை:இயங்கி கொண்டிருப்பதால் (உஷ்ண கட்டுப்பாட்டு மையத்திற்கான நேரம் )கட்டாயம் உறக்கத்தில் இருக்க வேண்டும் .எந்தெந்த உறுப்புக்கு என்ன மாதிரியான உஷ்ணம் தேவை என்பதையறிந்து சமபடுத்தும் நேரம் . உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உஷ்ணத்தால் இணைக்கும் நேரம் .இந்நேரத்திற்குப் பின்பு ,கண்விழித்தலோ ,படிப்பதோ கூடாது .
இரவு 11 மணி முதல் 1மணி வரை இயங்கி கொண்டிருப்பதால்,ஆழ்ந்த தூக்கத்திற்கான நேரம் இந்த நேரத்தில் விழித்திருப்பதால் அடுத்த நாள் முழுசக்தியும் இழக்க நேரிடும் .பகலில் முடிவெடுக்கமுடியாத பிரச்னை எதுவாயினும் இந்த நேரத்தில் யோசித்தால் சரியான முடிவுஎடுக்கமுடியும் .
1மணிமுதல் 3மணி வரை :இயங்கி கொண்டிருப்பதால் இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும் .இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வைசக்தி குறையும் உடல் அரிப்பு ,நமைச்சல் அதிகரிக்கும் . இந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அனைத்து ரத்தத்தையும்,கல்லீரலால் சுத்தபடுத்தக்கூடிய நேரம் தூக்கம் கெட்டால் உடல் சுறுசுறுப்பின்மை,வாதநோய்கள் வர காரணமாகும் . நாம் உணவு சாப்பிடும் போது நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து மெதுவாக ரசித்து ,ருசித்து சாப்பிடவேண்டும் .அப்படி சாப்பிட்டால் நாம் உண்ணும் உணவு நேரடியாக உறுப்புகளுக்கு சக்தியாக மாறி ரத்தத்துடன் சேரும் .அவசர அவசரமாக சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடிப்பதால் நேரே இரப்பையில் சேர்ந்து செரிமானமாகி மலக்குடல் வழியாக கழிவாக வெளியேறிவிடும் .என்பதை உணரவும் . வலிகள் வர காரணம்